இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்..ஆப்கானிஸ்தான் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் விலகல்..?
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
மும்பை,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டம் நாளை மொகாலியில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஆட்டம் வரும் 14ம் தேதி இந்தூரிலும், 3வது ஆட்டம் வரும் 17ம் தேதி பெங்களூருவிலும் நடைபெறுகிறது.
இந்த தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு இப்ராகிம் ஜட்ரான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். யுஏஇ-க்கு எதிரான டி20 தொடரை தவறவிட்ட முஜீப் உர் ரஹ்மான் அணிக்கு திரும்பி உள்ளார்.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த நட்சத்திர வீரர் ரஷித் கான் டி20 தொடரில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.