டி20 தொடர்; முதலாவது ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் நாளை மோதல்!


டி20 தொடர்; முதலாவது ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் நாளை மோதல்!
x

image courtesy; AFP

இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது.

விசாகப்பட்டினம்,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அடுத்ததாக இந்திய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை இரவு 7 மணியளவில் நடைபெற உள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரை சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் படை களம் இறங்க உள்ளது. அவர்கள் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை சமாளிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேவேளையில் ஆஸ்திரேலிய அணியில் உலகக்கோப்பையில் விளையாடிய 7 வீரர்கள் இந்த தொடருக்கான டி20 அணியில் இடம்பெற்றுள்ளனர். மேத்யூ வேட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

1 More update

Next Story