டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு


டி20 உலகக் கோப்பை:  இங்கிலாந்து அணி அறிவிப்பு
x

டி20 உலகக்கோப்பை போட்டி ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது

கேப்டவுன் ,

9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ள 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க உள்ள 15 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணி:

ஜோஸ் பட்லர் , மொயின் அலி, ஜோப்ரா ஆர்ச்சர், பேர்ஸ்டோ, ஹாரி புரூக், சாம் கரன், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், கிறிஸ் ஜோர்டன், லியாம் லிவிங்ஸ்டன், ஆதில் ரஷித், பில் சால்ட், ரீஸ் டாப்லி, மார்க் வுட்.


Next Story