டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு


டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு
x

Image Courtesy: AFP 

இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் இடம் பிடித்துள்ளார்.

மெல்போர்ன்,

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதி வருகின்றன. இதில் குரூப் 1ல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2ல் இருந்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

இந்நிலையில், லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா ஜிம்பாப்வே அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தனது குரூப்பில் முதல் இடத்துக்கு முன்னேறி அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ள நினைக்கும். ஒருவேளை இந்திய அணி இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் குரூப் 2ல் 2வது இடத்துக்கு சரிந்து அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்ள வேண்டி வரும்.

இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் இடம் பிடித்துள்ளார்.


Next Story