டி20 உலகக்கோப்பை; குஜராத் மற்றும் பரோடா அணிகளுடன் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் நேபாளம்


டி20 உலகக்கோப்பை; குஜராத் மற்றும் பரோடா அணிகளுடன் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் நேபாளம்
x

Image Courtesy: @CricketNep

2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

அதன்படி அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா மற்றும் உகாண்டா ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. தொடரில் கலந்து கொள்ளும் 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி பிரிவு ஏ-ல் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா அணிகளும், பிரிவு பி-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் அணிகளும், பிரிவு சி-ல் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பாபுவா நியூ கினியா அணிகளும், பிரிவு டி-ல் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், நெதர்லாந்து, நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இதிலிருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக நேபாள அணி இந்தியாவின் குஜராத் மற்றும் பரோடா அணிகளுக்கு எதிராக முத்தரப்பு டி20 தொடரில் ஆட உள்ளது. 'நட்புக் கோப்பை' என அழைக்கப்படும் இந்த தொடர் மார்ச் 31 முதல் ஏப்ரல் 7 வரை நடைபெற உள்ளது.

ஐ.சி.சி. தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள நேபாளம், அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்கு இந்தப் போட்டியைப் பயன்படுத்துகிறது.


Next Story