டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்ய முடிவு


டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்ய முடிவு
x

Image Courtesy: ICC Twitter

இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

சிட்னி,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் குரூப்1-ல் இன்று சிட்னியில் நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் இங்கிலாந்து-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இதுவரை 5 புள்ளிகள் (2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லை) பெற்று இருக்கிறது.

இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும். தோல்வி அடைந்தால் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறும். எனவே ஆஸ்திரேலிய ரசிகர்கள் இலங்கை அணி ஜெயிக்க வேண்டும் என நினைப்பர்.

20 ஓவர் கிரிக்கெட்டில் 2014-ம் ஆண்டுக்கு பிறகு இலங்கை அணி, இங்கிலாந்தை வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்நிலையில், இந்தப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.


Next Story