2024 டி20 உலகக்கோப்பை; இந்திய அணிக்கு கேப்டன் யார்..? - ரோகித்தா..பாண்ட்யாவா..? - யுவராஜ் சிங் கருத்து


2024 டி20 உலகக்கோப்பை;  இந்திய அணிக்கு கேப்டன் யார்..? - ரோகித்தா..பாண்ட்யாவா..? - யுவராஜ் சிங் கருத்து
x

Image Courtesy: ANI

2024 டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.

மும்பை,

2024 டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. அதன்படி தொடரில் கலந்து கொள்ள இருக்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் இந்தியாவின் கேப்டனாக யார் செயல்படபோகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. தற்போது ஆப்கானிஸ்தான் தொடரில் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா உலகக்கோப்பையிலும் இந்தியாவை வழி நடத்துவார் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அவசியமான வீரர் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். அதே சமயம் அனுபவத்தை எந்த விலையை கொடுத்தும் வாங்க முடியாது என்று தெரிவிக்கும் அவர் ரோகித் சர்மா கேப்டனாக இருக்கலாம் என மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது,

இந்திய அணியின் வெற்றிக்கு ஹர்திக் பாண்ட்யா தேவை. ஐபிஎல் போன்ற டி20 தொடரில் உங்கள் வயது அதிகமாகும்போது பிரச்சினையை சந்திப்பீர்கள். ஏனெனில் ஒவ்வொரு ஐபிஎல் அணியும் இளம் வீரர்களுக்குதான் வாய்ப்பும், முன்னுரிமையும் கொடுக்கும். நானும் இந்த சவால்களை சந்தித்துள்ளேன்.

ஆனால் உங்களால் அனுபவத்தை எதை கொடுத்தும் வாங்க முடியாது. அந்த வகையில் ஏராளமான அனுபவத்தை கொண்டுள்ள ரோகித் சர்மா வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார். இருப்பினும் அவருடைய ஐபிஎல் அணி வருங்காலத்தை பார்க்கிறது. டி20 கிரிக்கெட்டில் கேப்டன்ஷிப் செய்வதற்கு நிறைய வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் ஏற்கனவே சொன்னதுபோல் அனுபவத்தை எதை வைத்தும் வாங்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story