வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை முதல் இன்னிங்சில் 531 ரன்கள் குவிப்பு


வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை முதல் இன்னிங்சில் 531 ரன்கள் குவிப்பு
x

குசால் மெண்டிஸ் 93 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 92 ரன்னும், எடுத்தனர்.

சட்டோகிராம்,

வங்காளதேசம், இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் சட்டோகிராமில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது .முதல் இன்னிங்சில் இலங்கை 531 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.அந்த அணியின் குசால் மெண்டிஸ் 93 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 92 ரன்னும், கருணரத்னே 86 ரன்னும், தனஞ்செய டி சில்வா 70 ரன்னும், சண்டிமால் 59 ரன்னும், நிஷான் மதுஷ்கா 57 ரன்னும் எடுத்தனர்.வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டும், ஹசன் மெஹ்மூத் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து, முதல் இன்னிங்சை விளையாடிய வங்காளதேச அணி 2வது நாள் நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்துள்ளது. .

1 More update

Next Story