டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை; அஸ்வினை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறிய பும்ரா


டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை; அஸ்வினை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறிய பும்ரா
x

image courtesy; twitter/@BCCI

தினத்தந்தி 7 Feb 2024 10:57 AM GMT (Updated: 7 Feb 2024 11:10 AM GMT)

டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியா தரப்பில் விராட் கோலி மட்டுமே முதல் 10 இடத்திற்குள் உள்ளார்.

துபாய்,

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் மற்றும் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய வீரர் அஸ்வினை பின்னுக்கு தள்ளி மற்றொரு இந்திய வீரரான பும்ரா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் 3-வது இடத்தில் இருந்த அவர் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதுவரை முதலிடத்தில் இருந்த அஸ்வின் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்க வீரர் ரபடா 2-வது இடத்தில் தொடருகிறார். இந்த வரிசையில் இந்தியா தரப்பில் ஜடேஜா 9-வது இடத்தில் உள்ளார்.

டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பெரிய அளவில் மாற்றமில்லை. முதலிடத்தில் நியூசிலாந்து வீரர் வில்லியம்சனே தொடருகிறார். ஆஸ்திரேலிய வீரர் சுமித் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து வீரரான ரூட் 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார். இந்த வரிசையில் இந்தியா தரப்பில் விராட் கோலி மட்டுமே முதல் 10 இடத்திற்குள் உள்ளார். அவர் 7-வது இடத்தில் உள்ளார்.

டெஸ்ட் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் முதல் 3 இடங்களில் மாற்றமின்றி ஜடேஜா, அஸ்வின் மற்றும் ஷகிப் அல் ஹசன் தொடருகின்றனர். இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தையும், இந்திய ஆல் ரவுண்டர் அக்சர் படேல் ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.


Next Story