ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; பாகிஸ்தான் அணி அறிவிப்பு!


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
x

image courtesy; ICC

தினத்தந்தி 21 Nov 2023 3:08 AM GMT (Updated: 21 Nov 2023 3:16 AM GMT)

பாகிஸ்தான் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

கராச்சி,

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி 4 வெற்றி, 5 தோல்வியுடன் லீக் சுற்றை தாண்டவில்லை. தோல்வி எதிரொலியாக கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகினார். இதையடுத்து டெஸ்ட் அணிக்கு பேட்ஸ்மேன் ஷான் மசூத் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அணியின் புதிய தேர்வு குழு தலைவராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் பொறுப்பேற்றார்.

பாகிஸ்தான் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் இடையிலான முதலாவது டெஸ்ட் டிச.14-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது. இதற்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 18 பேர் கொண்ட அந்த அணியில் பேட்ஸ்மேன் சயீம் அயூப், வேகப்பந்து வீச்சாளர்கள் குர்ரம் சேஷாத், ஆமிர் ஜமால் ஆகிய வீரர்கள் புதுமுக வீரர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் டெஸ்ட் அணி வருமாறு:- ஷான் மசூத் (கேப்டன்), ஆமிர் ஜமால், அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமது, பாபர் அசாம், பஹீம் அஷ்ரப், ஹசன் அலி, இமாம் உல்-ஹக், குர்ரம் சேஷாத், மிர் ஹம்சா, முகமது ரிஸ்வான், முகமது வாசிம், நமன் அலி, சயீம் அயூப், சல்மான் ஆஹா, சர்ப்ராஸ் அகமது, சாத் ஷகீல், ஷாகின் அப்ரிடி.

இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதால் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


Next Story