வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்; நியூசிலாந்து அணி அறிவிப்பு!
வங்காளதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இந்த மாத இறுதியில் நடக்க உள்ளது.
வெலிங்டன்,
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்ததும் நியூசிலாந்து அணி அடுத்ததாக இந்த மாத இறுதியில் வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
உலகக்கோப்பைக்கு முன்னதாக இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வங்காளதேசத்தில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. பின்னர் உலகக்கோப்பை தொடரை கணக்கில் கொண்டு டெஸ்ட் தொடர் இந்த மாத இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி டெஸ்ட் தொடர் நடக்க உள்ளது.
இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு டிம் சவுதி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதில் உலகக்கோப்பை தொடரில் அசத்தி வரும் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா அணியில் இடம்பெற்றுள்ளார். மேலும் ஆல் ரவுண்டர் மிட்செல் சான்ட்னர் டெஸ்ட் அணிக்கு திரும்பி இருக்கிறார்.
15 வீரர்கள் கொண்ட நியூசிலாந்து அணி விவரம் பின்வருமாறு;-
டிம் சவுதி (கேப்டன்), டாம் ப்ளண்டெல், டெவோன் கான்வே, மாட் ஹென்ரி, கைல் ஜேமிசன், டாம் லாதம், டேரில் மிட்செல், ஹென்ரி நிக்கோல்ஸ், அஜாஸ் படேல், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, , மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, கேன் வில்லியம்சன்
இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது.