தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்...இந்தியாவின் விக்கெட் கீப்பராக இவர்தான் செயல்பட வேண்டும் - ஹர்பஜன் சிங்


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்...இந்தியாவின் விக்கெட் கீப்பராக இவர்தான் செயல்பட வேண்டும் - ஹர்பஜன் சிங்
x

image courtesy; AFP

இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இதில் முதலாவதாக டி20 தொடர் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்கள் நடைபெற உள்ளன.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவின் விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுல் செயல்பட வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

தென் ஆப்பிரிக்காவில் இந்தியாவின் விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுல் செயல்படுவதை நான் பார்க்க விரும்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் கீப்பிங் செய்வதற்கு அவர் நிறைய ஆர்வத்தை காட்டுவார் என்று நான் நினைக்கவில்லை.

ஆனால் அணிக்காக செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட சூழ்நிலைகளில் அவர் அந்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். தற்போதைய நிலைமையில் இஷான் கிஷன் இத்தொடரில் முழுமையான விக்கெட் கீப்பராகவும், ராகுல் பேட்ஸ்மேனாகவும் விளையாடுவதற்கு வாய்ப்புகள் தெரிகின்றன.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவின் விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுல் செயல்பட வேண்டும். வெற்றி பெறுவதற்கு நான் ஒரு சிறந்த விக்கெட் கீப்பரை தேர்வு செய்ய வேண்டுமெனில் அது கே.எல்.ராகுலாக இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story