டி20 உலக கோப்பை தொடர் முடிந்த கையோடு ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி


டி20 உலக கோப்பை தொடர் முடிந்த கையோடு ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி
x

Image Courtacy: AFP

2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

அதன்படி அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா மற்றும் உகாண்டா ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. தொடரில் கலந்து கொள்ளும் 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி பிரிவு ஏ-ல் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா அணிகளும், பிரிவு பி-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் அணிகளும், பிரிவு சி-ல் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பாபுவா நியூ கினியா அணிகளும், பிரிவு டி-ல் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், நெதர்லாந்து, நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இதிலிருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் ஜூன் 1-ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து அரையிறுதி ஆட்டங்கள் ஜூன் 26 மற்றும் 27ம் தேதிகளிலும், இறுதிப் போட்டி ஜூன் 29-ம் தேதியும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தொடர் நிறைவடைந்ததும் இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொடர் ஜூலை 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும் எனவும், 5 டி20 போட்டிகளும் ஹராரேவில் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story