வேற வழியே இல்லை...ஆர்.சி.பி வெற்றி பெற இந்த மாற்றத்தை செய்தே ஆக வேண்டும் - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்


வேற வழியே இல்லை...ஆர்.சி.பி வெற்றி பெற இந்த மாற்றத்தை செய்தே ஆக வேண்டும் - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்
x

Image Courtesy: AFP

ஐ.பி.எல் தொடரில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.

பெங்களூரு,

ஐ.பி.எல் தொடரில் பெங்களூருவில் நேற்று முன் தினம் நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் ஆர்.பி.சி - கே.கே. ஆர் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. பெங்களூர் தரப்பில் விராட் கோலி 59 பந்தில் 83 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 183 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா நரைன், பில் சால்ட், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அதிரடியின் மூலம் 16.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டை மட்டும் இழந்து 186 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் விராட் கோலி மெதுவாக விளையாடியதே பெங்களூரு தோல்வியை சந்திப்பதற்கு காரணமாக அமைந்ததாக ஒரு தரப்பு ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். நடப்பு ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு இதுவரை 3 லீக் ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 2 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

பெங்களூரு அணி தோல்வி கண்டதை அடுத்து பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த பவுலிங்கை வைத்துக் கொண்டு ஆர்.சி.பி கோப்பையை வெல்ல முடியாது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் பவுலிங் கூட்டணியை சரி செய்து வெற்றி பாதைக்கு திரும்ப லாக்கி பெர்குசன், ரீஸ் டாப்லி ஆகிய 2 வெளிநாட்டு பவுலர்களை பிளேயிங் லெவனில் கொண்டு வாருங்கள் என்று பெங்களூரு அணிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,

ஆர்.சி.பி இரண்டு வெளிநாட்டு சிறப்பு வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து விளையாடுவதைத் தவிர வேறு வழியில்லை. பெர்குசன் மற்றும் டாப்லி ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும். இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.




Next Story