முதல் ஆறு ஓவர்களிலேயே அவர்கள் போட்டியை உடைத்து விட்டார்கள் - தோல்வி குறித்து டு பிளெஸ்சிஸ் கருத்து


முதல் ஆறு ஓவர்களிலேயே அவர்கள் போட்டியை உடைத்து விட்டார்கள் - தோல்வி குறித்து டு பிளெஸ்சிஸ் கருத்து
x

Image Courtesy: AFP

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே ஏற்பட்ட சில தவறுகள் காரணமாக தோல்வி அமைந்தது.

பெங்களூரு,

ஐ.பி.எல் தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற 10வது லீக் ஆட்டத்தில் ஆர்.பி.சி - கே.கே. ஆர் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 183 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா நரைன், பில் சால்ட், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அதிரடியின் மூலம் 16.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டை மட்டும் இழந்து 186 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

இந்நிலையில், முதல் இன்னிங்ஸ்ஸின் போது விக்கெட் இருவேகத்தன்மையுடன் இருந்தது எனவும், பவர் பிளேவிலேயே சுனில் நரேன் மற்றும் சால்ட் ஆகியோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் மீது அழுத்தத்தை கொடுத்தார்கள் எனவும், அவர்கள் முதல் ஆறு ஓவர்களிலேயே போட்டியை உடைத்து விட்டார்கள் எனவும் பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் கூறியுள்ளார்.

இந்த போட்டியில் தோல்வி அடைந்த பின்னர் டு பிளெஸ்சிஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது, முதல் இன்னிங்ஸ்ஸின் போது விக்கெட் இருவேகத்தன்மையுடன் இருந்தது. கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களுக்கு பவுலிங்கின் போது ஸ்விங் ஆனதால் அது மிகவும் உதவியது.

விராட் கோலி போன்ற பேட்ஸ்மேனே பந்தை அடிக்க முடியாமல் கஷ்டப்பட்டதை பார்க்கும் போதே உங்களுக்கு மைதானம் ஸ்லோவாக இருந்தது புரிந்திருக்கும். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸின் போது கொல்கத்தா வீரர்களுக்கு சாதகமாக பனிப்பொழிவும் இருந்தது. பவர் பிளேவிலேயே சுனில் நரேன் மற்றும் சால்ட் ஆகியோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் மீது அழுத்தத்தை கொடுத்தார்கள்.

அவர்கள் இருவரும் அதிரடியாக விளையாடி வந்ததால் முதலில் சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தாமல் வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தினோம். ஆனால் முதல் ஆறு ஓவர்களிலேயே அவர்கள் போட்டியை உடைத்து விட்டார்கள். இந்த போட்டியில் ரசல் அதிகமாக கட்டர் பந்துகளை வீசினார். அதனாலே நாங்கள் வைசாக் விஜயகுமாரை அணிக்குள் கொண்டு வந்தோம். ஆனால் இன்றைய போட்டியில் நாங்கள் நினைத்தது போன்று எதுவும் நடக்கவில்லை. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே ஏற்பட்ட சில தவறுகள் காரணமாக தோல்வி அமைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story