2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் இவர்தான்... ஜெய் ஷா உறுதி


2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் இவர்தான்... ஜெய் ஷா உறுதி
x
தினத்தந்தி 15 Feb 2024 2:07 AM GMT (Updated: 15 Feb 2024 2:10 AM GMT)

2024 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் யார் என்ற கேள்விக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதிலளித்துள்ளார்.

மும்பை,

2024 டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் கலந்து கொள்ள இருக்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.அதில் குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, ஓமன், நமீபியா அணிகளும்,

குரூப் சி-யில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா,பாப்புவா நியூ கினியா அணிகளும், குரூப் டி-யில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், நெதர்லாந்து, நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் யார் என்ற கேள்விக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் ,

இந்த நேரத்தில், ரோகித் சர்மா தான் இந்திய அணியின் ஒரு அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிக்கும் கேப்டன். இது ஒரு கூட்டு முடிவு, மற்றும் தேர்வாளர்கள் இந்த விஷயத்தில் முழுமையாக இணைந்துள்ளனர். 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை நீங்கள் நினைவு கூர்ந்தால், 4 விக்கெட்டுக்கு 27 ரன்கள் எடுத்து கடினமான இடத்தில் இருந்தோம், ஆனால் ரோகித் சர்மாவின் சதம் ஆட்டத்தை மாற்றியது. அவருடைய திறமையை நாம் கேள்வி கேட்க முடியாது. 2023-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நாம் தோற்று இருக்கலாம். ஆனால் தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் வென்றதன் மூலம் ரசிகர்களின் மனதை வென்றோம்.

2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெல்லும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.என தெரிவித்தார்.

சில மாதங்களுக்கு முன்பு ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்ட்யாவை அந்த அணி நிர்வாகம் கேப்டனாக்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story