தோல்விக்கு இதுதான் காரணம் - ஆப்கானிஸ்தான் கேப்டன் வெளிப்படை..!


தோல்விக்கு இதுதான் காரணம் - ஆப்கானிஸ்தான் கேப்டன் வெளிப்படை..!
x

image courtesy; PTI 

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்தது.

மொகாலி,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் இப்ராஹிம் சத்ரான் கூறுகையில் : ''இந்த போட்டியில் நாங்கள் 30 முதல் 40 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டதாக நினைக்கிறேன். மேலும் டாசையும் இழந்ததால் அதுவும் எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்த போட்டியில் எங்களது அணியின் வீரர்கள் மிகச்சிறப்பாக போராடியதாக நினைக்கிறேன்.

நாங்கள் பவர்பிளே ஓவர்களிலேயே சிறப்பான துவக்கத்தை அளிக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததால் எங்களால் அதிரடி காட்ட முடியவில்லை. எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் யாராவது ஒருவர் 14-15 ஓவர்கள் வரை நின்று விளையாடி இருந்தால் நிச்சயம் இந்திய அணியின் மீது அழுத்தத்தை அளித்திருக்க முடியும்.

அதேபோன்று இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவும் இருந்ததால் பந்துவீச்சாளர்களால் பந்தை கிரிப் செய்ய முடியவில்லை. எங்களது அணியின் பந்துவீச்சில் எந்த ஒரு பிரச்சினையும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனாலும் பீல்டிங்கில் நாங்கள் முன்னேற்றம் அடைய வேண்டியது அவசியம். அதேபோன்று பேட்டிங்கிலும் முன்னேற்றத்தை காண வேண்டும்''என்றார்.


Next Story