டி.என்.பி.எல்: சேலத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சு தேர்வு


டி.என்.பி.எல்: சேலத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சு தேர்வு
x

image credit: @TNPremierLeague

சேலத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

சேலம்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் அடுத்தக்கட்ட ஆட்டங்கள் சேலம் வாழப்பாடியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்று வருகிறது. இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கிய 13-வது லீக்கில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவதாக நடக்கும் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி சேலம் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story