பாகிஸ்தானுக்கு எதிரான அதிரடி சதம்...'புஷ்பா' ஸ்டைலில் கொண்டாடிய டேவிட் வார்னர் - வீடியோ...!


பாகிஸ்தானுக்கு எதிரான அதிரடி சதம்...புஷ்பா ஸ்டைலில் கொண்டாடிய டேவிட் வார்னர் - வீடியோ...!
x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன.

பெங்களூரு,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோரின் அதிரடி சதத்தால் 367 ரன்கள் குவித்தது.

இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் 124 பந்தில் 163 ரன்கள் எடுத்தார். இந்நிலையில், இந்த ஆட்டத்தில் சதம் அடித்த மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த வார்னர் சதம் அடித்ததை புஷ்பா பட ஸ்டைலில் கொண்டாடினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.




Next Story