ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து பாடல் பாடி நடனமாடிய தோனி- வைரல் வீடியோ

Image Courtesy: AFP/ Twitter
இந்த விழாவில் பாண்டியாவுடன் இணைந்து தோனி நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
துபாய்,
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தற்போது தனது குடும்பத்துடன் துபாய்க்கு சென்றுள்ளார். துபாயில் நடந்த தனது நெருங்கிய நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்ட விழாவில் எம்.எஸ்.தோனி நேற்று தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.
நியூசிலாந்தில் டி20 தொடரை கைப்பற்றிய கையுடன் ஹர்திக் பாண்டியா, தோனி உடன் துபாயில் இணைந்துள்ளார். தற்போது இந்த விழாவில் பாண்டியாவுடன் இணைந்து தோனி நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தோனியின் மனைவி சாக்சி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ள வீடியோவில், பிரபல ராப் பாடகர் பாட்ஷா உடன் தோனியும் பாட்டு பாடுவதும், அவரும் இணைந்து நடனமாடுவதும் பதிவாகியுள்ளது. கிரிக்கெட்டில் பல வரலாற்று வெற்றிகளை இந்திய அணிக்கு பெற்று கொடுத்துள்ள தோனி களத்தில் 'கூலாக' காணப்படுபவர். இந்த நிலையில் அவர் மகிழ்ச்சியுடன் ஆடி, பாடும் இந்த வீடியோ அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள மகேந்திர சிங் தோனிக்கு அதிக ஓய்வு நேரம் கிடைப்பதால், இயற்கை விவசாயம், திரைப்பட தயாரிப்பு நிறுவனம் என பல தொழில்களில் தோனி தற்போது கவனம் செலுத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






