இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி ஆட்டத்தில் மழை குறுக்கிட்டால் என்ன ஆகும்..?


இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி ஆட்டத்தில் மழை குறுக்கிட்டால் என்ன ஆகும்..?
x
தினத்தந்தி 15 Nov 2023 2:20 AM GMT (Updated: 15 Nov 2023 5:36 AM GMT)

உலகக்கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளுக்கு ரிசர்வ் நாள் வழங்கப்பட்டுள்ளது.

மும்பை,

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்திய அணியும், 4-வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் மோத உள்ளன. இந்நிலையில் மழையால் இன்றைய ஆட்டம் பாதிக்கப்பட்டால் அடுத்து என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

உலகக்கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளுக்கு ரிசர்வ் நாள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றைய ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டால், ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு ரிசர்வ் நாளில்(நாளை) தொடர்ந்து நடத்தப்படும்.

ரிசர்வ் நாளிலும் முடிவு எட்டப்படவில்லை என்றால், லீக் ஆட்டங்களில் அதிக புள்ளிகளைப் பெற்ற அணி இறுதிப்போட்டிக்கு செல்லும். அதன்படி லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.


Next Story