சிஎஸ்கே அணியில் இருந்த போது டோனியிடம் கற்றுக்கொண்டவற்றை எதிர்வரும் ஐபிஎல்லில் வெளிப்படுத்துவேன் - ஜெகதீசன்


சிஎஸ்கே அணியில் இருந்த போது டோனியிடம் கற்றுக்கொண்டவற்றை எதிர்வரும் ஐபிஎல்லில் வெளிப்படுத்துவேன் - ஜெகதீசன்
x

Image Courtesy: @ChennaiIPL Twitter

சிஎஸ்கே அணியில் இருந்த போது டோனியிடம் கற்றுக்கொண்டவற்றை எதிர்வரும் ஐபிஎல்லில் வெளிப்படுத்தி உங்கள் அனைவரையும் மகிழ்விப்பேன் என ஜெகதீசன் கூறியுள்ளார்.

சென்னை,

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறயிருக்கும் 16-ஆவது ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் மினி ஏலமானது கடந்த 23-ஆம் தேதி கொச்சியில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பல வெளிநாட்டு வீரர்கள் கோடி கணக்கில் ஏலத்தில் சென்றனர். அதேவேளையில் இந்திய வீரர்களுக்கும் இந்த ஏலத்தில் நல்ல வரவேற்பு இருந்தது.

400-க்கும் மேற்பட்ட வீரர்களில் இருந்து 80-க்கும் மேற்பட்ட வீரர்கள் மட்டுமே இந்த ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஏலத்தில் இந்திய வீரர்களும் கணிசமான தொகைக்கு ஏலம் போனார்கள். அந்தவகையில் அண்மையில் நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே தொடரில் 5 சதங்களை விளாசிய தமிழக வீரர் ஜெகதீசனை எடுக்க சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது.

இந்நிலையில் இந்த ஏலத்தில் 20 லட்சம் என்கிற அடிப்படை விலையில் கலந்துகொண்ட ஜெகதீசனை கொல்கத்தா அணி 90 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது. எதிர்வரும் சீசனில் விளையாடயிருப்பது குறித்து பேசிய தமிழக வீரர் நாராயணன் ஜெகதீசன் கூறுகையில்:-

ஒவ்வொரு வீரருக்கும் ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். அந்தவகையில் நானும் அடுத்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக நிறைய போட்டிகளில் விளையாடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சென்னை அணியில் நான் இருந்த வரை டோனியிடம் இருந்து நிறைய விசயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன். நிச்சயம் அவற்றை எதிர்வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் வெளிப்படுத்தி உங்கள் அனைவரையும் மகிழ்விப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story