உங்கள் பேட்டிங் ரகசியம் என்ன? ரோகித் சர்மாவிடம் கேள்வி கேட்ட நடுவர்...!


உங்கள் பேட்டிங் ரகசியம் என்ன?  ரோகித் சர்மாவிடம் கேள்வி கேட்ட நடுவர்...!
x
தினத்தந்தி 15 Oct 2023 1:45 PM IST (Updated: 15 Oct 2023 1:49 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா- பாக். இடையிலான ஆட்டத்தின்போது ரோகித்திடம் உங்கள் பேட்டிங் ரகசியம் என்ன? என்று களத்தில் இருந்த நடுவர் எராஸ்மஸ் கேட்டுள்ளார்.

அகமதாபாத்,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 3-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 191 ரன்களில் சுருண்டது.

அதைத்தொடர்ந்து 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 6 பவுண்டரி, 6 சிக்ஸருடன் 86 (63) ரன்கள் விளாசி வெற்றியை உறுதி செய்து அவுட்டானார்.

இந்நிலையில், இந்த ஆட்டத்தின் போது சிக்ஸர் அடித்த பின் ரோகித் சர்மாவிடம் "எப்படி இது போன்ற சிக்ஸர்களை நீங்கள் அடிக்கிறீர்கள். உங்கள் பேட்டிங் ரகசியம் என்ன?" என்று களத்தில் இருந்த நடுவர் எராஸ்மஸ் கேட்டுள்ளார். அதற்கு ரோகித் சர்மா தனது கையின் பலத்தை காண்பிப்பதுபோல் ஏதோ சொன்னார்.

ஆட்டம் முடிவடைந்த பின் நடுவரிடம் என்ன சொன்னீர்கள் என்று ரோகித்திடம் பாண்ட்யா கேட்டார். அதற்கு "நடுவர் எப்படி நீங்கள் இது போன்ற சிக்ஸர்கள் அடிக்கிறீர்கள். பேட்டில் எதுவும் வைத்திருக்கிறீர்களா என்று என்னிடம் கேட்டார். அதற்கு பேட்டில் எதுவுமில்லை. இவை அனைத்தும் என்னுடைய பவர்" என்று பாண்ட்யாவிடம் ரோகித் சர்மா சொன்னது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story