ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு ஒருநாள் ஆட்டங்களில் குல்தீப் யாதவ் ஏன் இடம் பெறவில்லை? - ரோகித் சர்மா பதில்


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு ஒருநாள் ஆட்டங்களில் குல்தீப் யாதவ் ஏன் இடம் பெறவில்லை? - ரோகித் சர்மா பதில்
x

image courtesy; AFP

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி 8வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதையடுத்து இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது.

இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முதல் இரு ஆட்டங்களுக்கு ஒரு அணியும், கடைசி ஆட்டத்துக்கு ஒரு அணியும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆசிய கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருது பெற்ற குல்தீப் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் இரு ஆட்டங்களில் இடம் பெறவில்லை. உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு மூன்றாவது ஆட்டத்துக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு ஆட்டத்துக்கான அணியில் குல்தீப் யாதவ் ஏன் இடம் பெறவில்லை என இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து ரோகித் சர்மா கூறியதாவது,

குல்தீப் யாதவை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாட வைத்து அவரின் திட்டங்களை நாங்கள் பெரிய அளவில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வெளிக்காட்ட விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

இதன் மூலம் நிச்சயம் அவர் அக்டோபர் 8-ஆம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை தொடக்க ஆட்டத்தில் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.


Next Story