எம்.எஸ். தோனி வழியை பின்பற்றி இந்த போட்டியில் வெற்றி பெறுவேன் - பேட் கம்மின்ஸ் நம்பிக்கை


எம்.எஸ். தோனி வழியை பின்பற்றி இந்த போட்டியில் வெற்றி பெறுவேன் - பேட் கம்மின்ஸ் நம்பிக்கை
x

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் ஐதராபாத் - சென்னை அணிகள் மோத உள்ளன.

ஐதராபாத்,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோத உள்ளன. 3 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி மட்டுமே பெற்றுள்ள ஐதராபாத் அணி இப்போட்டியில் வென்று 2-வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் களமிறங்குகிறது.

மறுபுறம் 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை பதிவு செய்துள்ள சென்னை கடந்த போட்டியில் டெல்லியிடம் தோற்றது. எனவே இப்போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தி வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்புடன் சென்னை களமிறங்குகிறது.

இந்நிலையில் வீரர்களிடம் ஒளிந்திருக்கும் சிறந்த செயல்பாடுகளை வெளிக்கொண்டு வருவதில் தோனி சிறந்தவர் என ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். எனவே அவருடைய வழியை பின்பற்றி இப்போட்டியில் சென்னையை தோற்கடிப்பேன் என்று உறுதியான நம்பிக்கை தெரிவிக்கும் கம்மின்ஸ் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"வீரர்களிடமிருந்து சிறந்த செயல்பாடுகளை வெளிக்கொண்டு வருவதே ஒரு கேப்டனாக என்னுடைய முதன்மை வேலை. அதற்காக எம்.எஸ். தோனி போன்ற ஒருவரை மிஞ்சி விடலாம் என்று எண்ணத்துடன் எதையும் முயற்சி செய்யப் போவதில்லை. வீரர்களிடம் ஒளிந்திருக்கும் சிறந்த செயல்பாடுகளை வெளிக்கொண்டு வருவதில் தோனி சிறந்தவர். எனவே அவருடைய வழியை பின்பற்றி என்னுடைய வீரர்களிடமிருந்து சிறந்த செயல்பாடுகளை வெளிக்கொண்டு வந்து இப்போட்டியில் வெற்றி பெறுவேன். அது எங்களுக்கு வேலை செய்யும் என்று நம்புகிறேன்.

நீங்கள் எந்த அணியின் கேப்டனாக அல்லது வீரராக இருந்தாலும் எப்போதும் உங்கள் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். ரசிகர்கள் எவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறார்கள் என்பதை நாம் அறிவோம். கடினமான டி20 கிரிக்கெட்டில் நாங்கள் எதையும் புதிதாக செய்யப் போவதில்லை. எங்களுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த முயற்சிக்கிறோம். எங்களுக்கு சில அற்புதமான வெற்றிகளும் கடினமான தோல்விகளும் கிடைத்துள்ளன. ஆனால் எப்போதும் சிறந்த செயல்பாடுகளை கொடுத்து ஐ.பி.எல். கோப்பையை வெல்ல முயற்சிக்க வேண்டும் என்பதே எங்களுடைய எண்ணமாகும்" என்று கூறினார்.


Next Story