தொடரை சமன் செய்யுமா நியூசிலாந்து...வங்காளதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம்..!


தொடரை சமன் செய்யுமா நியூசிலாந்து...வங்காளதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட்  போட்டி நாளை தொடக்கம்..!
x

Image Courtesy: @ICC 

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

டாக்கா,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து 150 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் நாளை தொடங்க உள்ளது. இந்த தொடரை சமன் செய்ய வேண்டுமானால் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் நியூசிலாந்து அணி ஆட உள்ளது.

அதேவேளையில் கடந்த ஆட்டத்தைபோல் இந்த ஆட்டத்திலும் நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து தொடரை கைப்பற்றும் முனைப்புடன் வங்காளதேசம் உள்ளது. இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.


Next Story