இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியிலிருந்தும் நட்சத்திர வீரர் விலகலா? வெளியான தகவல்


இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியிலிருந்தும் நட்சத்திர வீரர் விலகலா? வெளியான தகவல்
x

image courtesy; PTI

இவர் ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

மும்பை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி வீரர்களான ஜடேஜா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் காயம் காரணமாக விலகினர். இது இந்திய அணிக்கு பின்னடைவை கொடுத்துள்ளது.

ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தின்போது ஜடேஜாவுக்கு தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் இவர் 2-வது போட்டியிலிருந்து விலகினார்.

இந்நிலையில் ஜடேஜாவிற்கு ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால் அவர் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் அவர் 3-வது டெஸ்ட் போட்டியிலிருந்தும் விலக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story