பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசத்திற்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.
சில்ஹெட்,
8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தின் சில்ஹெட் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 7 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.
பாகிஸ்தானுடன் நேற்றைய போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில் வங்காள தேசத்திற்கு எதிராக இன்று இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷபாலி வர்மா 55 ரன்களும், ஸ்மிர்தி மந்தனா 47 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி பேட்டிங் செய்து வருகிறது.
Related Tags :
Next Story






