மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு


மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு
x

Image Courtesy: @ACCMedia1

மகளிர் ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் இன்று மோத உள்ளன.

தம்புல்லா,

9-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையின் தம்புல்லாவில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரையிறுதி ஆட்டங்களின் முடிவில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்தியாவும், சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கையும் தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. 7 முறை சாம்பியனான இந்திய அணி 8-வது பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேவேளையில் இலங்கை அணி முதல்முறையாக ஆசிய கோப்பை பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளது.

எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

1 More update

Next Story