பெண்கள் கிரிக்கெட்; சிட்ரா அமீன் சதம் வீண்...பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து..!


பெண்கள் கிரிக்கெட்; சிட்ரா அமீன் சதம் வீண்...பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து..!
x

Image Courtesy: @ICC

பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.

குயின்ஸ்டவுன்,

பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி சுசி பேட்ஸின் சதம் (108 ரன்) மூலம் 50 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 365 ரன்கள் குவித்தது. இதையடுத்து 366 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது.

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான சிட்ரா அமீன் ஒரு புறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட் விழுந்த வண்ணம் இருந்தது. முனீபா அலி 44 ரன், சதாப் ஷமாஸ் 10 ரன், பிஸ்மா மரூப் 14 ரன், அலியா ரியாஸ் 14 ரன், ஒமைமா சோஹைல் 7 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய சிட்ரா அமீன் சதம் (105 ரன்) அடித்த நிலையில் ரன் அவுட் ஆனார். இறுதியில் பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 234 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 131 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என நியூசிலாந்து முன்னிலை வகிக்கிறது.


Next Story