மகளிர் கிரிக்கெட்; 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதல்..!
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
மும்பை,
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது போட்டியை ஆஸ்திரேலியா வென்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.
நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியாவும், அதேவேளையில் தொடரை இழக்காமல் இருக்க நாளை கட்டாயம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நிலையில் இந்தியாவும் ஆட உள்ளது. இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.