மகளிர் கிரிக்கெட்; வங்கதேசத்துக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு...!


மகளிர் கிரிக்கெட்; வங்கதேசத்துக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு...!
x

Image Courtesy: @BCCIWomen

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய பெண்கள் அணியினர் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றினர்.

டாக்கா,

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அங்கு 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை இந்திய பெண்கள் அணியினர் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றினர்.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணியினர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளனர்.


Next Story