பெண்கள் பிரீமியர் லீக்: குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி


பெண்கள் பிரீமியர் லீக்: குஜராத் அணியை  வீழ்த்தி பெங்களூரு  அபார வெற்றி
x

8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

பெங்களூரு,

2வது பெண்கள் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் மும்பை, டெல்லி, பெங்களூரு, குஜராத், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்நிலையில், பெண்கள் பிரீமியர் கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் குஜராத் - பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது

இதையடுத்து, களமிறங்கிய குஜராத் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்தது.அதிகபட்சமாக தயாளன் ஹேமலதா 31 ரன்கள் எடுத்தார்.

இதனை தொடர்ந்து 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு 12.3 ஓவரில் 2 விக்கெட்டு மட்டும் இழந்து 110 ரன்கள் குவித்தது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 43 ரன்கள் எடுத்தார்


Next Story