பெண்கள் பிரீமியர் லீக்; டெல்லி - பெங்களூரு அணிகள் இன்று மோதல்


பெண்கள் பிரீமியர் லீக்; டெல்லி - பெங்களூரு அணிகள் இன்று மோதல்
x

பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது

புதுடெல்லி,

2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் டெல்லி அணி 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 2 தோல்வி கண்டு 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் 6 ஆட்டங்களில் ஆடியுள்ள பெங்களூரு அணி 3 வெற்றி, 3 தோல்வி கண்டு 6 புள்ளியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது .


Next Story