பெண்கள் பிரீமியர் லீக்: கோப்பையை வெல்லுமா பெங்களூரு? - வெற்றிபெற 114 ரன்கள் இலக்கு


பெண்கள் பிரீமியர் லீக்: கோப்பையை வெல்லுமா பெங்களூரு? -  வெற்றிபெற 114 ரன்கள் இலக்கு
x
தினத்தந்தி 17 March 2024 3:33 PM GMT (Updated: 17 March 2024 3:53 PM GMT)

பெங்களூரு அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் டெல்லி அணி 113 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

புதுடெல்லி,

2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. இந்த நிலையில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீராங்கனைகள் மெக் லானிங் , ஷாபாலி வர்மா இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தனர்.

சிறப்பாக விளையாடி தொடக்க விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்தத நிலையில் ஷாபாலி வர்மா 23 ரன்களில் வெளியேறினார்.

இதனை தொடர்ந்து வந்த ,ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆலிஸ் கேப்ஸி ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் சிறப்பாக ஆடி வந்த மெக் லானிங் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.தொடர்ந்து களமிறங்கிய டெல்லி வீராங்கனைகளும் பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இதனால் 18.3ஓவர்கள் முடிவில் 113ரன்களுக்கு டெல்லி அணி ஆட்டமிழந்தது . பெங்களூரு அணி சார்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் 4 விக்கெட் , மோலினக்ஸ் 3 விக்கெட் , ஆஷா சோபனா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடுகிறது


Next Story