பெண்கள் பிரீமியர் லீக்; ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதல்


பெண்கள் பிரீமியர் லீக்;  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதல்
x

Image Courtesy: @wplt20

2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.

புதுடெல்லி,

2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. மும்பை அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விட்டது.

பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமெனில் இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் களம் இறங்குகிறது.

ஒருவேளை பெங்களூரு அணி இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் அடுத்த அணிகளின் முடிவிற்காக காத்திருக்க வேண்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.


Next Story