மகளிர் டி20 உலகக்கோப்பை: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பயிற்சி ஆட்டத்தில் இன்று மோதல்..!


மகளிர் டி20 உலகக்கோப்பை: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பயிற்சி ஆட்டத்தில் இன்று மோதல்..!
x

Image Courtesy: ICC Twitter 

8வது மகளிர் டி20 உலகக்கோப்பை தென் ஆப்பிரிக்காவில் பிப்ரவரி 10 ம் தேதி தொடங்குகிறது.

கேப்டவுன்,

8வது மகளிர் டி20 உலகக்கோப்பை தென் ஆப்பிரிக்காவில் பிப்ரவரி 10 ம் தேதி தொடங்குகிறது. பிப் 10 அன்று தொடங்கும் இந்த தொடரில் முதல் போட்டியில் போட்டி தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்காவும், இலங்கையும் மோதுகின்றன. இந்த தொடரில் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொளகின்றன.

இந்த தொடரில் பங்கேற்கும் நாடுகள் தங்களது அணிகளை அறிவித்து விட்டன. இந்திய அணி ஹர்மன்பிரீத கவுர் தலைமையில் பங்கேற்கிறது. இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் பிப்ரவரி 12ம் தேதி பாகிஸ்தானை சந்திக்கிறது. இந்நிலையில் இந்த தொடருக்கு அனைத்து அணிகளும் சிறப்பாக தயாடாகும் பொருட்டு ஒவ்வொரு அணிக்கும் தலா 2 பயிற்சி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

பயிற்சி ஆட்டங்கள் இன்றும், நாளை மறுநாளும் நடைபெறுகின்றன. இந்திய அணி தனது 2 படிற்சி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம் அணிகளை சந்திக்கிறது. இன்று நடைபெறும் முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இன்று ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.



1 More update

Next Story