பெண்கள் டி20 உலகக்கோப்பை: இலங்கையை பந்தாடியது நியூசிலாந்து அணி


பெண்கள் டி20 உலகக்கோப்பை: இலங்கையை பந்தாடியது நியூசிலாந்து அணி
x
தினத்தந்தி 20 Feb 2023 4:04 AM IST (Updated: 20 Feb 2023 4:07 AM IST)
t-max-icont-min-icon

நியூசிலாந்து அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபாரவெற்றி பெற்றது.

போலந்து பார்க்,

பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் நியூசிலாந்து அணி இலங்கை அணிகள் இன்று பலப்பரிட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வுசெய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக அமேலா கெர் 66 ரன்கள் விளாசினார்.

இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் இலங்கை ரன்குவிக்க திணறியதுடன், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பறிதவித்தது.

இறுதியில் இலங்கை அணி 15.5 ஓவர்களில் 60 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. நியூசிலாந்து தரப்பில் அமேலா கெர், லியா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன் மூலம் நியூசிலாந்து அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலிலும் இரண்டாம் இடத்தை பிடித்தது.


Next Story