உலகக்கோப்பை தொடர்; சச்சின், தோனி, யுவியை இந்திய அணிக்குள் கொண்டு வாங்க - ஆஸி. முன்னாள் வீரர்


உலகக்கோப்பை தொடர்; சச்சின், தோனி, யுவியை இந்திய அணிக்குள் கொண்டு வாங்க - ஆஸி. முன்னாள் வீரர்
x
தினத்தந்தி 20 Sep 2023 3:42 AM GMT (Updated: 20 Sep 2023 4:00 AM GMT)

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியுடன் சச்சின், தோனி, யுவராஜ் சிங் இணைந்து தங்களுடைய ஆலோசனைகளை வழங்கலாம் என ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.

மும்பை,

இந்தியாவில் வரும் அக்டோபர் 5ம் தேதி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை சென்னையில் சந்திக்கிறது.

கடந்த 10 வருடங்களாக எந்த வித ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது.

இந்நிலையில் சச்சின், தோனி, யுவராஜ் சிங் போன்றவர்களில் யாராவது தங்களுடைய அனுபவத்தை இந்திய அணிக்கு கொடுத்து சொந்த மண்ணில் உலகக்கோப்பையை வெல்ல உதவுவதற்கு வழிவகை செய்ய வேண்டுமென ஆடம் கில்கிறிஸ்ட் வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,

ஒரு இந்திய வீரராக இந்தியாவில் விளையாடுவது எப்படி இருக்கும் என்பதை நான் அறிய முடியாது. அது எப்போதும் சுவாரசியமானது. ஒருவேளை நான் இந்திய வட்டாரத்தில் இருந்தால் சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி போன்றவர்கள் நேரம் கிடைத்தால் அணியுடன் இருந்து தங்களுடைய அனுபவத்தை கொடுக்க முடியுமா என்று கேட்பேன்.

அதே போல 2011 தொடரில் பல பிரச்சினைகளை தாண்டி சிறப்பாக விளையாடிய யுவராஜ் சிங் போன்றவர் தம்முடைய அனுபவத்தை சொல்லுமாறு கேட்க முயற்சி செய்வேன். மேலும் அந்த உலகக்கோப்பையில் விளையாடிய விராட் கோலி இந்த அணியிலும் ஒரு பகுதியாக இருக்கிறார். எனவே அது போன்ற வீரர்களின் அனுபவத்தை பயன்படுத்தி சொந்த மண்ணில் அவர்கள் எப்படி கோப்பையை வென்றார்கள் என்பதை கண்டறிய நான் முயற்சிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story