உலகக்கோப்பை கிரிக்கெட்; இந்தியா-ஆஸ்திரேலியா வீரர்கள் இணைந்த பிளேயிங் லெவன்...7 இந்திய வீரர்களுக்கு இடம்...!


உலகக்கோப்பை கிரிக்கெட்; இந்தியா-ஆஸ்திரேலியா வீரர்கள் இணைந்த பிளேயிங் லெவன்...7 இந்திய வீரர்களுக்கு இடம்...!
x

Image Courtesy: PTI

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா-ஆஸ்திரேலியா வீரர்கள் இணைந்த பிளேயிங் லெவனை ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி தேர்வு செய்துள்ளார்.

மெல்போர்ன்,

10 அணிகள் கலந்து கொண்ட 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

அரையிறுதி ஆட்டங்களில் இந்திய அணி நியூசிலாந்தையும், ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதையடுத்து உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா வீரர்கள் இணைந்த இந்த உலகக்கோப்பையின் பிளேயிங் லெவனை தேர்வு செய்துள்ளார். இந்த அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் 7 இந்திய வீரர்களும், 4 ஆஸ்திரேலிய வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

டாம் மூடி தேர்வு செய்த இந்தியா - ஆஸ்திரேலிய வீரர்கள் இணைந்த பிளேயிங் லெவன்:

ரோகித் சர்மா (கேப்டன்). டேவிட் வார்னர், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் ஸ்டார்க், முகமது ஷமி, ஜஸ்ப்ரீத் பும்ரா, ஆடம் ஜாம்பா.


Next Story