உலகக்கோப்பை கிரிக்கெட்; ஹாட்ரிக் வெற்றி பெறப்போவது யார்...? - இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நாளை மோதல்...!


உலகக்கோப்பை கிரிக்கெட்; ஹாட்ரிக் வெற்றி பெறப்போவது யார்...? - இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நாளை மோதல்...!
x

Image Courtesy: AFP 

தினத்தந்தி 13 Oct 2023 3:24 PM IST (Updated: 13 Oct 2023 3:39 PM IST)
t-max-icont-min-icon

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

அகமதாபாத்,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

இரு அணிகளும் தலா 2 ஆட்டங்கள் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் ஹாட்ரிக் வெற்றி பெறப்போவது யார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.

இந்திய அணியில் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் சுப்மன் கில் ஆடுவாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. 50 ஓவர் உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வி கண்டதில்லை என்ற பெருமையை தக்க வைக்க கடுமையாக போராடும், அதே வேளையில் இந்திய அணியை வீழ்த்த பாகிஸ்தான் கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.


Next Story