உலகக்கோப்பை; இந்தியாவுக்கு ஹர்த்திக் பாண்ட்யா ஆல்-ரவுண்டராகத் தேவை, பேட்ஸ்மேனாக அல்ல - இந்திய முன்னாள் வீரர்
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ஹர்த்திக் பாண்ட்யா ஆல்-ரவுண்டராகத்தான் தேவை என இந்திய முன்னாள் வீரர் கூறியுள்ளார்.
மும்பை,
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது . கடந்த 10 வருடங்களாக எந்த வித ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது.
இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கு ஹர்த்திக் பாண்ட்யா ஒரு ஆல்ரவுண்டராகத்தான் தேவை, பேட்ஸ்மேனாக அல்ல என இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது,
ஹர்த்திக் பாண்டியாவின் பார்ம் கவலையளிக்கிறது. அவர் உலகக் கோப்பையில் நிறைய கடினமான வேலைகளைச் செய்ய வேண்டும். உங்களுக்கு அவர் ஒரு ஆல்-ரவுண்டராகத் தேவை, ஒரு பேட்ஸ்மேனாக அல்ல.
அவர் குறைந்தபட்சம் 6-7 ஓவர்கள் பந்துவீச வேண்டும். 2011 உலகக் கோப்பையை இந்தியா வென்றபோது, யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா போன்றவர்கள் பந்துவீசக்கூடிய பேட்டர்களாக இருந்தனர்.
50 ஓவர் வடிவத்தில் குல்தீப் யாதவுடன் இணைந்து விக்கெட்டுகளை எடுக்க சாஹல் முன்னேற்றம் காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.