உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியாவின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த முன்னாள் வீரர் - சமாளிக்குமா இந்திய அணி...?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த மாதம் 7ம் தேதி இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
துபாய்,
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த மாதம் 7ம் தேதி இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தி நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன.
கடந்த முறை நியூசிலாந்து அணியிடம் தோல்வி கண்ட இந்திய அணி இந்த முறை ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. இந்திய அணியில் கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், பும்ரா, ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோர் இல்லாதது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கான பிளேயிங் லெவனை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் ஹேசில்வுட் களம் இறங்கவில்லை என்றால் அவருக்கு மாற்றாக ஸ்காட் போலண்ட் களம் இறக்கப்படலாம் என்று கூறியுள்ளார்.
ரிக்கி பாண்டிங் தேர்வு செய்துள்ள ஆஸ்திரேலிய அணி:-
உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர், மார்னஸ் லபுஸ்சாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), நாதன் லயன், ஸ்காட் போலண்ட்.
குறிப்பு: ஹேசில்வுட் முழு உடற்தகுதியுடன் இல்லை என்றால் மட்டும்.