தோனியால் இளம் வீரர்கள் நிறைய பலன் அடைகிறார்கள் - ஸ்டீபன் பிளெமிங்


தோனியால் இளம் வீரர்கள் நிறைய பலன் அடைகிறார்கள் -  ஸ்டீபன் பிளெமிங்
x

image courtesy: PTI

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு 10 நாட்களுக்கு மேலாக சேப்பாக்கத்தில் பயிற்சி முகாம் நடந்து வருகிறது.

சென்னை,

17-வது ஐ.பி.எல். தொடர் சென்னை சேப்பாக்கத்தில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் - பெங்களூர் ராயல் சேலஞ்சர்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதனையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு 10 நாட்களுக்கு மேலாக சேப்பாக்கத்தில் பயிற்சி முகாம் நடந்து வருகிறது. கேப்டன் தோனி உள்ளிட்டோர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். எப்போதும் போட்டித் தொடர் தொடங்குவதற்கு 2-3 வாரத்திற்கு முன்பாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது குறித்து சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில், 'சில வீரர்களின் வயது, அவர்கள் ஆடிய கிரிக்கெட்டை கருத்தில் கொண்டு, கடந்த சில ஆண்டுகளாக எங்களின் பயிற்சி முகாமை நீட்டித்துள்ளோம். இதில் தோனியின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. ஏனெனில் அவர் முன்கூட்டியே அணியுடன் இணைந்து விடுகிறார்.

அவரால் ஈர்க்கப்படும் மற்ற இளம் இந்திய வீரர்களும் சீக்கிரம் வந்து விடுகிறார்கள். சர்வதேச வீரர்கள் தங்களது போட்டிகளை முடித்துக் கொண்டு கொஞ்சம் தாமதமாகத்தான் அணியில் இணைவார்கள். அதற்குள் இளம் வீரர்கள் தோனியுடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் நிறைய பலன் அடைகிறார்கள்.' என்றார்.


Next Story