ஐ.எஸ்.எல். கால்பந்து: பஞ்சாப்பை வீழ்த்திய சென்னை அணி


ஐ.எஸ்.எல். கால்பந்து: பஞ்சாப்பை வீழ்த்திய சென்னை அணி
x

Image Courtacy: ChennaiyinFCTwitter

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி சென்னை அணி வெற்றிபெற்றது.

சென்னை,

சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 2023-24 இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) போட்டியில் பஞ்சாப் எப்சிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னையின் எப்சி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

சென்னை அணியில் ரையான் எட்வர்ட்ஸ், கனோர் ஷீல்ட்ஸ் (2), ரபெல் கிரிவெல்லாரோ, வின்சி பரேட்டோ ஆகியோர் கோல் அடித்தனர். ஆட்டத்தின் 86வது நிமிடத்தில் கிருஷ்ணானந்த சிங் குண்டோங்பாம் பஞ்சாப் அணியின் ஒரே கோலை அடித்தார்.

5-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 2-வது வெற்றியாகும். இது புள்ளிப்பட்டியலில் டாப்-6க்கு முன்னேற சென்னை அணிக்கு உதவியது.


Next Story