ஐஎஸ்எல் கால்பந்து: கோவா அணியை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி


ஐஎஸ்எல் கால்பந்து: கோவா அணியை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி
x

image courtesy: Hyderabad FC twitter

இன்று நடைபெற்ற போட்டியில் ஐதராபாத்-கோவா அணிகள் மோதின.

ஐதராபாத்,

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இதில் இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் ஐதராபாத்-கோவா அணிகள் மோதின. இந்த போட்டியில் ஐதராபாத் அணி சார்பில் ஜாவியர் சிவேரியோ ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

ஆட்ட நேர முடிவில் ஐதராபாத் அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோவை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. தொடர்ந்து 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் ஏடிகே மோகன் பகான்-ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதி வருகின்றன.


Next Story