ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; ஐதராபாத் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி


ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; ஐதராபாத் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி
x

Image Courtesy: @IndSuperLeague / @bengalurufc / @HydFCOfficial

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

புவனேஷ்வர்,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்த தொடரில் பெங்களூருவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு - ஐதராபாத் அணிகள் மோதின.

இதில் முதல் பாதி ஆட்டம் கோல் இன்றி முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற 2ம் பாதி ஆட்டத்தில் 71வது நிமிடத்தில் பெங்களூரு அணி முதல் கோல் அடித்து ஆட்டத்தில் 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் ஐதரபாத் அணி பதில் கோல் திருப்பியது.

இதையடுத்து 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனில் நீடித்தது. ஆட்டம் டிராவில் முடிவடையும் என எதிர்பார்த்த வேளையில் ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் பெங்களூரு அணி மேலும் ஒரு கோல் அடித்து 2-1 என முன்னிலை பெற்றது. இறுதியில் இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.


Next Story