ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கோவா - மும்பை அணிகள் நாளை மோதல்..!


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கோவா - மும்பை அணிகள் நாளை மோதல்..!
x

Image Courtesy: @MumbaiCityFC

10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

கோவா,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று ஓய்வு நாளாகும். இதையடுத்து நாளை நடைபெறும் ஆட்டத்தில் கோவா - மும்பை அணிகள் மோத உள்ளன.

நடப்பு தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் கோவா அணி 7 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி 1 டிரா கண்டு புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதே வேளையில் மும்பை அணி 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 2 டிரா கண்டு புள்ளிப்பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.


Next Story