ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; மோகன் பகான் - மும்பை அணிகள் இன்று மோதல்..!


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; மோகன் பகான் -  மும்பை அணிகள் இன்று மோதல்..!
x

Image Courtesy: @IndSuperLeague

10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

மும்பை,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதும்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் மோகன் பகான் - மும்பை அணிகள் மோத உள்ளன. இதுவரை நடைபெற்றுள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் மோகன் பகான் அணி 7 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 1 டிரா கண்டு புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

அதேவேளையில் 8 ஆட்டங்களில் ஆடியுள்ள மும்பை அணி 4 வெற்றி, 4 டிரா கண்டு புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story