ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; ஒடிசா - கோவா ஆட்டம் டிரா

Image Courtesy: @IndSuperLeague / @OdishaFC / @FCGoaOfficial
12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
ஒடிசா,
12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் ஒடிசாவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிசா எப்.சி - கோவா எப்.சி அணிகள் மோதின.
இந்த ஆட்டம் ஆரம்பித்த தொடக்கத்திலேயே ஒடிசா அணியின் ராய் கிருஷ்ணா (4வது நிமிடம்) கோல் அடித்து அசத்தினார். இதேபோல் கோவா அணியின் ஜெய் குப்தா (37வது நிமிடம்) கோல் அடித்து ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார். இதையடுத்து முதல் பாதி ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது.
Related Tags :
Next Story






